web log free
November 15, 2025

அமெரிக்கா செல்ல முயன்ற ரஞ்சனுக்கு விமான நிலையத்தில் நேர்ந்த கதி!

அமெரிக்காவில் கச்சேரி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளிநாடு செல்வதற்காக நேற்று (27) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஏசியன் மிரருக்கு தெரிவித்தார்.

நேற்றிரவு 08.15 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான KR-655 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க முதலில் கட்டுநாயக்கவில் இருந்து கட்டார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில், அந்த நீதிமன்றங்களால் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் அவற்றை உள்ளடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் திரு.ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd