ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் முதல் 203 நாட்களில், மத்திய வங்கி ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.3.4 பில்லியன் என்ற அளவில் ரூ.691 பில்லியன்களை அச்சிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ஆளுநர் கப்ராலின் 203 நாட்களின் முழுப் பதவிக் காலத்திலும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.2.2 பில்லியனாக மொத்தம் ரூ.446 பில்லியன் அச்சிடப்பட்டது.
ஆனால் இதுவரை நந்தலால் வீரசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பண அச்சீடு நாளொன்றுக்கு 54% அதிகரித்துள்ளது.