வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை நியமிக்கப்படாவிட்டால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் அபாயம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.
இதற்குக் காரணம் தற்போது தற்காலிக ஆட்சியமைப்பதாகவும் நிரந்தர அரசாங்கம் இல்லாத காரணத்தினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கப்பாட்டுக்கு வந்து அமைச்சரவையை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விவாதத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை நடாத்தி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் திட்டம் என தெரிவிக்கப்படுகிறது.