நாட்டு மக்களின் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேராயர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீடற்ற குடும்பங்கள் இருக்கும் போது டொலர்களைக் கண்டுபிடிப்பதற்காக நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு மூன்று சொகுசு வீட்டுப் பிரிவுகளைக் கட்டி வெளிநாட்டவர்களுக்கு விற்றதாகக் கூறிய கர்தினால், வெளிநாட்டினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைச்சு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினர்.
'மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.
“முன்பு ஒரு பிரிவு முறை இருந்தது. அந்தவகையில் நாம் பாராளுமன்ற உறுப்பினரை நியமிக்கும் போது அவர் தனது பிரதேச மக்களை இயன்றவரை கவனித்துக்கொள்கிறார். இப்போது அப்படி எதுவும் இல்லை. மாவட்டம் முழுவதும் ஓட்டு கேட்க செல்ல வேண்டும். வாக்களித்த மக்கள் வந்தவுடன் விரட்டியடிக்கப்படுகின்றனர். அன்பர்களே, இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். இந்த நாட்டு மக்களை உணர்வுப்பூர்வமாக கையாளும் தலைமைக்கு மட்டுமே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.