கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 202 கைதிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று முன்தினம் (06) இரவு பத்து மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த அரலகங்வில, மானம்பிட்டிய, வெலிகந்த, ஹிகுராக்கொட, புலஸ்திகம பொலிஸ் நிலையங்களில் இருந்தும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற கலவரச் சம்பவம் தொடர்பில் 201 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் 514 கைதிகள் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
எனினும் மேலும் 30 கைதிகளை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.