web log free
May 23, 2026

தெளஹீத் ஜமாத் அமைப்பின் அமைப்பாளருக்கு விளக்கமறியல்


தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான
மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று
முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுள்ளமை
விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும்
கைப்பற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பொலிஸார் நீதிமன்றில்
தெரிவித்துள்ளனர்.

அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்
பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd