எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கட்சி தாவும் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சமகி ஜனபலவேகவின் 13 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட தினத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர்.
இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இணையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.