web log free
May 10, 2025

மதூஷை நாடு கடத்துவது தொடர்பான தீர்மானம் இன்று

பாதாள உலகக் கும்பல் தலைவன் என அறியப்படும் மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது
தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று டுபாய் நீதிமன்றத்தில் மதூஷ் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

மாகந்துரே மதூஸ், பாடகர் அமல் பெரேரா மற்றும் நடிகர் ரயன் உள்ளிட்ட 39 பேர் பெப்ரவரி 4 ஆம் திகதி டுபாயில் வைத்து
அந்நாட்டு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பின்னர், சட்ட நடவடிக்கைகளின் பின்னர்., கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பாடகர்
அமல் பெரேரா மற்றும் நடிகர் ரயன் ஆகியோர் உள்ளிட்ட 30 சந்தேக நபர்கள் டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு
கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தன்னை இலங்கைக்கு நாடுகடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்து மாகந்துரே மதூஷ், டுபாய்
நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த டுபாய் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை இன்று வரை
ஒத்திவைத்தது.

இந்த நிலையில், குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், மாகந்துர
மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Monday, 09 September 2019 17:14
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd