கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 77வது வரவு செலவுத் திட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இந்த வரவு செலவுத் திட்டம், இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் முன்வைக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டமாகும்.
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் 7,885 பில்லியன் ரூபா அரசாங்க செலவீனமாக ஒதுக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்தத் தொகையானது இந்நாட்டின் வரலாற்றில் மிக அதிகமான வரவு செலவுத் திட்ட மதிப்பீடாகும்.