சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு இலங்கை பிரஜாவுரிமை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவரது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள பலர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமகி ஜன பலவேகய தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வந்த அவர் தற்போது அவரது குடியுரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சமகி ஜனபலவேகவின் எம்.பி பதவியை பெறுவதற்கு அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலரிடையே போட்டி நிலவி வருவதாக, இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூறப்படுகின்றது.
அவ்வாறு வெற்றிடம் நிலவினால் அந்த இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர அல்லது சுஜீவ சேனசிங்க ஆகிய இருவரில் ஒருவரை நியமிப்பது குறித்து சஜித் பிரேமதாச கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.