web log free
April 06, 2026

'சர்வதேச நாடுகளின் உதவி அவசியம்'

 

 

சர்வதேச பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் என பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பென் வெலஷ், ஜனாதிபதியை நேற்று சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல் சர்வதேச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகுமென தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இத்தகைய உலக பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி அவசியமாகும் எனவும் பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd