web log free
February 15, 2026

ரணிலின் அறிவிப்பு குறித்து மைத்திரி சாதகமான பதில்

குறித்த நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நல்ல முறையில் ஒழுங்கமைக்க முடியும் எனவும், அந்தக் காலத்தில் கட்சியை உயர்வாக வைத்திருக்க இது ஒரு சந்தர்ப்பம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd