நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள திலினி பிரியமாலியின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க என புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான வலுவான மூன்று ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திலினியின் தாய் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், இரண்டாவது திருமணத்தில் மேலும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாவது திருமணத்தின் கணவர் தொழிலில் கொத்தனார் என்றும் கூறுகிறார்.


