பல அரசியல் கட்சிகள் இரண்டு வலுவான கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்று வருவதாக அந்த குழுக்களின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவொன்று, ஐக்கிய தேசியக் கட்சியும் பொஹொட்டுவவும் இணைந்து கூட்டணியை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமகி ஜன பலவேக மற்றும் பொஹொட்டுவவைச் சேர்ந்த சுயேச்சைக் குழு ஒன்று மற்றைய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரு குழுக்களும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோற்றவுள்ளதாகவும், இதுவே முதல் பரிசோதனையாக இருக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.