சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், கொழும்பில் இருந்து கண்டி வரை எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தவிர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொள்கின்றார்.
மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தால், எதிர்க்கட்சித் தலைவர் இந்த முறை நெடுஞ்சாலையில் மக்களிடம் அடி வாங்க நேரிடும் என்றார்.
தனது இயலாமையை மறைப்பதற்காக மீண்டும் பேரணி நடத்தத் தயாராகி வருவதாகத் தெரிவித்த அவர், தனக்கு திறமையிருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ அழைத்த போது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.