ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வர வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே பலர் கட்சியை விட்டு விலக தீர்மானித்துள்ளதாகவும் சிலர் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மைத்திரிபால சிறிசேனவை எடுத்துக் கொண்டால் அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியான பின்னர் எமது கட்சியில் இருந்து எம்.பி.யானார். அதனால்தான் மீண்டும் யோசியுங்கள் என்கிறேன். மொட்டுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் மிகவும் வசதியான இடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்சவுடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க விருப்பம் உள்ளதாகவும், இணைவது நாட்டுக்காக இருக்க வேண்டும் என்றும் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் வலியுறுத்திய அவர், மறுபக்கம் இருந்தால் நாட்டுக்கு நல்லது. அந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.