web log free
December 05, 2023

மின் கட்டணம் உயர்வு விரைவில் அமுல்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்காமல் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஒன்று உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நாட வேண்டிய அவசியமில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள மின்சாரக் கட்டணங்களின் கணக்கீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, அமைச்சரவையின் தீர்மானங்கள் மின்சார சட்டத்திற்கு அமைவாக அமையுமாயின் ஆணைக்குழுவிற்கு அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.