web log free
January 12, 2025

நுகேகொடை, தெல்கந்த சந்தியில் நேற்றிரவு சொகுசு கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்து நாசாமாகியுள்ளன.

இந்நிலையில் விபத்து சம்பவத்தில் காரிலிருந்த சாரதியும் மற்றொருவரும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெல்கந்த சந்தியில் இருந்து மஹரகம நோக்கி சென்ற கார் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த லொறி தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு சொந்தமான ஸ்டுடியோ வளாகத்தில் உபகரணங்கள் இறக்கப்படும் போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd