web log free
May 18, 2024

நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20 ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பதிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் கிங்ஸ்லீ ரத்னாயக மற்றும் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளனர்.

அதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது.

கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது


இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியின் சரியான பிரதிபலன்களை பெறுவதற்கு சுகாதார அமைச்சிடம் உரிய வேலைத்திட்டங்கள் இல்லை என மருத்துவ ஆய்வக விஞ்ஞான தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றினை தடுப்பதற்காக நாட்டை முடக்கிய போதிலும் மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டினுள் லொக்டவுன் அலை ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாங்கள் செய்துக் கொண்டு இருப்பது சப்ரைஸ் (ஆச்சரியம்) லொக்டவுன் என்றே கூற வேண்டும்.

சப்ரைஸ் முடக்கநிலை வழங்குவது தொற்றுநோய்க்கு எதிரானது. நட்சத்திரத்தை தெரிவு செய்யும் போட்டியை போன்று ஆர்வத்தை இறுதி வரை ஏற்படுத்திவிட்டு திடீரென லொக்டவுன் என அறிவிக்கப்படுகின்றது.

திடீரென அறிவித்தமையினால் மக்கள் முடக்க நிலையின் போது தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு வெறும் கையுடன் ஓடுகின்றனர்.

முடக்க நிலையின் பிரதிபலனை பெறுவதற்கு பதிலாக புதிய லொக்டவுன் கொத்தணி ஒன்றை ஏற்படுத்தும் அபாயமே உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைபடுத்தல் ஊரடங்கை மீறிய குற்றசாட்டிற்காக இன்று காலை 6 மணி வரையான 24மணி நேரத்திற்குள் மொத்தமாக 502 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தக் குற்றச்சாட்டிற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 முதல் இன்று வரை 56,796 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும் மேல்மாகாணத்தில் உள்நுழையும் மற்றும் வெளியேறும் எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடிகளில் நேற்று 757 வாகனங்களில் பயணித்த 1,509 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.