கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டதாக கூறப்படும் போதை மாத்திரைகளை யாழ்.பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அடையாளம் காணப்பட்ட இரு கார்களை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதிலிருந்து போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்.நகரை சேர்ந்த ஒருவரையும், கொழும்பை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றிரவு (14) பிற்பகல் 1.15 மணியளவில் கெக்கிராவ பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மற்ற இரண்டு துறவிகளுடன் வலுக்கட்டாயமாக நுழைந்த ஒரு பிக்குவை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய துறவி மற்ற இரண்டு துறவிகளுடன் முச்சக்கர வண்டியில் வெளியேறினார். கெக்கிராவ நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் நிஷாந்த பிரியதர்ஷன கருணாதிலக மற்றும் கெக்கிராவ சுகாதார மேலதிக மருத்துவ அதிகாரி W. அருண குமாரவினால் இது தொடர்பாக செய்யப்பட்ட புகாரின் பேரில் மடாகும பொலிஸ் சாலைத் தடுப்பில் முச்சக்கரவண்டியைத் தடுத்து நிறுத்தி தாக்கிய மூன்று பிக்குகள் மற்றும் சாரதியை கெக்கிராவ பொலிஸார் உடனடியாக கைது செய்து கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தாக்கப்பட்ட நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் கருணாதிலகே போலீசில் புகார் அளித்த பிறகு சிகிச்சைக்காக கெகிராவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துறவி கருணாதிலகவை உதைத்ததாகவும் பின்னர் கன்னத்தில் இரண்டு முறை அடித்ததாகவும் மருத்துவமனையின் மருத்துவர் கூறினார். இதன் காரணமாக அவர் காயங்களால் அவதிப்படுவதாக மருத்துவர் மேலும் கூறினார்.
கெக்கிராவ பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த மருத்துவ அதிகாரி அருண குமார, துறவி நேற்று (14) பிற்பகல் 1.15 மணியளவில் மற்ற இரண்டு துறவிகளுடன் அலுவலக வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாகக் கூறினார்.
தான் பிரதமருடன் நெருங்கிய தொடர்பைப் பேணுகிறவர் ஆகவே நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெறுவது அவசியம் என்று தாக்கிய துறவி கூறினார். நேற்று (14) தடுப்பூசி நிறைவடைந்து நேற்றைய பி.சி.ஆர். விசாரணைகள் தொடங்க உள்ள நிலையில் மருந்தளவு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்ட பின் துறவி வந்ததால் தடுப்பூசி பெற இன்று (15) வருமாறும் மருத்துவ அதிகாரி கூறியிருந்தார்.அதன் போது கோபமடைந்த துறவி தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே நிர்வாக பொது சுகாதார ஆய்வாளரை தாக்கியதாக மருத்துவ அதிகாரி அருண குமார மேலும் கூறினார்.
சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.அவர் இன்று (15) கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். கெக்கிராவ பொலிஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெலிகலவின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
யாழ் கோப்பாய் பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.
இவர் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைபடுத்தல் ஊரடங்கை மீறிய குற்றசாட்டிற்காக இன்று காலை 6 மணி வரையான 24மணி நேரத்திற்குள் மொத்தமாக 502 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தக் குற்றச்சாட்டிற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 முதல் இன்று வரை 56,796 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும் மேல்மாகாணத்தில் உள்நுழையும் மற்றும் வெளியேறும் எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடிகளில் நேற்று 757 வாகனங்களில் பயணித்த 1,509 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.