web log free
May 04, 2024

அனைத்துக்கும் முன்னுரிமை பிள்ளைகள் என்ற தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதனால் சிறுவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் இடம் பெற்றாலும் அது வகுப்பறை கல்வி முறைமைக்கு இணையானதாக அமையாது.  

சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலம் கற்றல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்ய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது முன்னுரிமை வழங்கு வேண்டிய வகுப்புகள் தொடர்பிலான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.சி.ஈ உயர்தர மாணவர்கள், ஜி.சி.ஈ சாதாரண தர மாணவர்கள் மற்றும் புலமைபரிசில் பரீட்சை மாணவர்களுக்கு முதலில் பாடசாலைகளை அரம்பிக்க திட்டமிடப்பட்டள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#இலங்கை #பாடசாலை #மாணவர்கள் #எல்எம்டீதர்மசேன