2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கொவிட் 19 தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் முன்னர் தெரிவித்திருந்த போதிலும், சுகாதார அமைச்சு இப்போது சில "தொழில்நுட்ப சிக்கல்களை" மேற்கோள் காட்டி, கூறப்பட்ட முடிவை செயல்படுத்துவதை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது.
சில “தொழில்நுட்ப சிக்கல்கள்” காரணமாக பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டைகளை மக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதை தாமதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
"சில தொழில்நுட்ப சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டும், குறிப்பாக மொபைல் பயன்பாட்டின் உருவாக்கம் மற்றும் QR (quick response - விரைவான பதில்) குறியீடு போன்றவை. எனவே இதை இன்னும் இரண்டு வாரங்கள் தள்ளிப்போட முடிவு செய்தோம். இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவை அமல்படுத்த முடியும்,'' என்றார்.