“வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களம்” என்ற பெயரில் புதிய திணைக்களமொன்று இலங்கை மத்திய வங்கியால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நாட்டிற்கு தொழிலாளர் பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வசதிப்படுத்தி சீர்படுத்துவதற்கு இம்மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இந்த திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பெறுமதி சேர்த்தலின் ஏறத்தாழ 100 சதவீதத்தினைக் கொண்டு தொழிலாளர் பணவனுப்பல்கள், இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களின் முக்கிய தூணொன்றாகவிருந்து நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குபிடிக்கும் தன்மைக்கு கணிசமான ஆதரவு வழங்குகின்றன.
தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வருடாந்த வர்த்தகப் பற்றாக்குறைக்கெதிராக ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு காப்பீடு வழங்கியதுடன், பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துவது முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமைக்கு சீரான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வழங்குதல் அத்துடன் வருமான மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் உள்ளடங்கலாக பல்வேறு சமூக - பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் எனும் பின்னணியில் இத்திளைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சற்று நேரத்திற்கு முன் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் முன்னிலையில் இராஜினாமா செய்துள்ளார். நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தது இலங்கை மத்திய வங்கி ஆளுநரான W.D. லக்ஷ்மன் அவர்களின் ஓய்வின் பின் பதிலாளுனராக தான் பொறுப்பேற்கவே என்பது குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்கு முன் அனுராதபுரத்தில் மத சடங்குகளில் ஈடுபட்டார். அவர் இந்த வாரம் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.