கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) பிற்பகல் முதல் நுவரெலியா தோட்டத்தில் விறகு சேகரிக்கும் போது காணாமல் போன 25 வயது பெண் ஒருவர் இராணுவப் படையினர், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஜே பாலன் கத்முனா தரணி ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தாயுடன் நுவரெலியா எஸ்டேட்டில் விறகு சேகரிக்கச் சென்றார், அன்றிலிருந்து காணாமல் போனார்.
தகவலறிந்து இந்த ஒருங்கினைப்பு சிறப்பு தேடல் நடவடிக்கை சில மணிநேரங்களுக்குள் தொடங்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் தேடுதல் குழு உறுப்பினர்கள் பணியில் தோட்டத் தொழிலாளர்கள் அளித்த ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் தேடுதல் தொடர்ந்து சென்றது.
அப்பகுதியில் அடர்ந்த காடும் மோசமான வானிலையும் இருந்த போதிலும் தேடும் குழுக்கள் அவளை தேடும் பணியை கைவிடாது அவளை முற்றிலும் உடல் நீரிழந்த நிலையில் தரையில் கிடந்திருக்கையில் கண்டுப்பிடித்தனர்.
நேற்று (9) மாலை சுமார் 6.30 மணியளவில் கண்டுப்பிடிக்கப்பட்டார். அவர் உடனடியாக நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.