யாழ் கோப்பாய் பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.
இவர் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை ஒன்றுசேர்த்து உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2,000 ரூபா வீதம் ஒருவர் உதவி தொகை வழங்கியுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவின் மதவடி பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை உதவி தொகை வழங்கப்படுவதாக அறிந்த அப்பகுதி மக்கள் பலரும் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.
அது தொடர்பில் தகவலறிந்து அவ்விடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார் உதவி தொகை பெற வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர்,
உதவி தொகை வழங்கியவர், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர் ஒருவருக்கு தலா 2,000 ரூபா வீதம் சுமார் 500இற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.