கரகொட, யக்கலமுல்லாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தை பிறக்கும்போதே இறந்துள்ளது.
குழந்தையின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்திய காலி, கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் பிரேத பரிசோதகர் சந்திரசேன லோகுகே, குழந்தையின் உடல் பாகங்களை மேலதிக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மரணம் குறித்து நேற்று வெளிப்படையான தீர்ப்பை வழங்கினார்.
இம்மாதம் 5 ஆம் திகதி குழந்தை பிறக்கவிருந்த நிலையில், அவர் 2 ஆம் திகதி காலியில் உள்ள மகமோதரா மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தையின் தாய் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 5 ம் தேதி அவருக்கு குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது
இறந்த பிறகு குழந்தைக்கு பிசிஆர் செய்யப்பட்டது. இந்த சோதனையில், குழந்தைக்கு கோவிட் வைரஸ் பாதிக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தாய் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் ஏற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.