உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ‘ஃபைசர்’ தடுப்பூசியை நாட்டில் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நேற்று ஒப்புதல் அளித்ததாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கூறினார்.
12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ‘ஃபைசர்’ தடுப்பூசி வழங்குவதன் மூலம், கொரோனா சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தடுக்க முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், கொவிட் ஒழிப்புக்குழுவின் ஒப்புதலுடன், கூடிய விரைவில் தடுப்பூசியை போடத் தொடங்குவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
அரசாங்கம் 20-30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது. இதனால், வைரஸ் பரவலில் ஏற்பட்டுள்ள குறைவு, கடுமையான நோய் மற்றும் இறப்புகளில் வீழ்ச்சி போன்ற தடுப்பூசி இயக்கத்தின் முழு விளைவுகளும் ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் தெரியவரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
மேலும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் முழு அளவையும் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்தவற்றை தெரிந்துக்கொள்ள எங்கள் செய்தித்தொகுப்போடு இணைந்திருங்கள்
#தடுப்பூசி
20 வயது முதல் 29 வயது வரைக்குமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இன்று முதல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 வயது முதல் 29 வயது வரைக்குமான நபர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
#சவேந்திரசில்வா #தடுப்பூசி