ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை ஒன்றுசேர்த்து உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2,000 ரூபா வீதம் ஒருவர் உதவி தொகை வழங்கியுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவின் மதவடி பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை உதவி தொகை வழங்கப்படுவதாக அறிந்த அப்பகுதி மக்கள் பலரும் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.
அது தொடர்பில் தகவலறிந்து அவ்விடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார் உதவி தொகை பெற வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர்,
உதவி தொகை வழங்கியவர், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர் ஒருவருக்கு தலா 2,000 ரூபா வீதம் சுமார் 500இற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.