படல்கும்புர - பசறை பிரதான வீதியின் அலுபொத பிரதேசத்தில் மனித மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
11ம் மைல் தூணுக்கு அருகாமையில் உள்ள வெறிச்சோடிய நிலத்தில் மண்டை ஓடு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு, டேம் ஸ்ட்ரீட் பகுதியில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்திற்கும், படல்கும்புரவில் கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுக்கும் தொடர்பு உள்ளதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதான சந்தேக நபர் படல்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.