18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தால் செயற்படுத்தப்படும் இந்த வேலைத் திட்டம் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 24,000 பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணபதி வித்தியாலயம்,வுல்பெண்டேல் பெண்கள் பாடசாலை,விவேகானந்தா கல்லூரி,அல் ஹக்கீம் கல்லூரி,மத்திய கொழும்பு இந்து கல்லூரிச் சேர்ந்த மாணவர்கள் விவேகானந்தா கல்லுாரியில் தமக்கான முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை, கொழும்பிலுள்ள விசாகா மற்றும் தேர்ஸ்டன் கல்லூரிகளில் தடுப்பூசிகள் அந்த பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மேலும், ஹோமாகம வலயத்தில் உள்ள 6 பாடசாலைகள், பிலியந்தல வலயத்தில் உள்ள 7 பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வலயத்தில் உள்ள 4 பாடசாலைகளிலும் முதலாவது டோஸ் தடுப்பூசி போடும் லேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
அனைத்துக்கும் முன்னுரிமை பிள்ளைகள் என்ற தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதனால் சிறுவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் இடம் பெற்றாலும் அது வகுப்பறை கல்வி முறைமைக்கு இணையானதாக அமையாது.
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலம் கற்றல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்ய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது முன்னுரிமை வழங்கு வேண்டிய வகுப்புகள் தொடர்பிலான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.சி.ஈ உயர்தர மாணவர்கள், ஜி.சி.ஈ சாதாரண தர மாணவர்கள் மற்றும் புலமைபரிசில் பரீட்சை மாணவர்களுக்கு முதலில் பாடசாலைகளை அரம்பிக்க திட்டமிடப்பட்டள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#இலங்கை #பாடசாலை #மாணவர்கள் #எல்எம்டீதர்மசேன