நாட்டில் இன்று முதல் கோதுமை மா 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்மானம் செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளைமுன்னதாக, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.
எனினும், 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்திருந்தார்.
இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.