நல்ல கணவர்கள் கிடைக்க வேண்டும் என மனைவிகள் எதிர்பார்ப்பது போல் நல்ல மனைவிகள் கிடைக்க வேண்டும் என கணவர்கள் நினைக்கக் கூடாதா? திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்க வேண்டும் என்பது கணவன் மனைவி இரண்டு பேரையும் பொறுத்து தான் அமைகிறது.
என் புருஷன் எனக்கு மட்டும் தான்
என் புருஷன் எனக்கு மட்டும் தான் அப்டின்னு நினைக்கும் மனைவி மார்களே?
என்றைக்காவது உங்கள் கணவரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? அவர்களின் முகத்தை வைத்தே அவர்களின் உள் காயங்களுக்கு மருந்திட்டிருக்கிறீர்களா?
வேலைக்கார கணவன்
பணத்தை கொண்டு வந்து கொட்டும் இயந்திரம் மட்டும் தானா கணவர்கள்.
அவர்களுக்கென்று என்னச் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?
எந்நேரமும் உங்களுக்காகவே மாடாக உழைக்கும் உங்கள் கணவர்களின் தனிமைகளை என்றாவது தீர்த்திருக்கிறீர்களா?
மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என கணவர்களின் மனதில் இருக்கும் சோகக் கதையை கேளுங்கள்.
நல்ல மனைவி
நல்ல மனைவியாக இருப்பது என்பது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விசயம் இல்லை. கணவரின் மனநிலைகளை சொல்லாமல் புரிந்துக் கொள்பவர் தான் சிறந்த மனைவி. ஒன்றை மட்டும் தெளிவாக கொள்ளுங்கள் உடலுறவு மட்டும் கணவருக்கு போதுமானது அல்ல. நான் இருக்கிறேன் உனக்குப் பின்னால் என்று சொல்லிப் பாருங்கள் அதுவே போதும்.
உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்
கல்யாணம் ஆன சிலக் காலங்களில் அணைத்த கைகள் என்ன? முத்தமிட்ட இதழ்கள் என்ன? காலங்கள் காலாவதி ஆகி இருக்கலாம். ஆனால் உங்கள் கணவர் என்றும் கணவர் தான். அதற்காக காதலை வெளிப்படுத்துவது என்பது வெறும் முத்தமோ, கட்டியணைப்போ என்பது மட்டுமல்ல. உணர்வுகள் மட்டுமே உரையாடும் இன்பமான தருணம் அது. அதற்கு மொழியோ விதிகளோ கிடையாது.
நீங்கள் நீங்களா இருங்க கணவனுக்கான மனைவியா தன்னை மாத்திக்கிறேன்னு சொல்லிட்டு உங்கள் சுயத் தன்மையை இழந்து விடாதீர்கள். அந்த விசயமும் தவறானது. சுயத்தன்மையை இழக்காமல் கணவரை புரிந்து நடந்துக் கொள்ளுங்கள்.
மௌனத்தை கலையுங்கள்
நீங்கள் மனதில் ஒன்றை வேண்டுமென்று நினைக்கிறீர்களா ? உடனடியாக கேட்டு விடுங்கள். சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு இயல்புக்கு மாறாக நடந்துக் கொள்ளாதீர்கள். என்ன ஆச்சு என்ன பிரச்சினை என்று கெஞ்ச வைக்காதீர்கள். என்ன வேண்டும் என்பதை அல்லது சொல்ல நினைத்ததை சொல்லி விடுங்களேன். மன அழுத்தங்களை மனைவிகள் தராமல் இருத்தலே சிறந்த மனைவிக்கான கோட்பாடாகும்.
நான் இருக்கிறேன் கலங்காதே
உலகில் எல்லா உயிரினமும் தனக்கென ஒரு ஜீவன் இருக்காதே என்று ஏங்குகிறது. அப்படி இருக்கையில் ஆண்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா எனன? கணவன் மார்களின் பிரச்சினைகளில் பங்கு கொள்ளாமல் கூட இருந்துவிட்டு போங்கள். ஒரு பொய்க்காவது நான் இருக்கிறேன் நீங்கள் கலங்காதீர்கள் என்று சொல்லிப் பாருங்கள். அதுவே அவர்களுக்கான மாமருந்தாக இருக்கும்.
ஓட்ட சைக்கிளில் சென்றாலும் அவர் உங்கள் கணவர் தான்
ஆயிரம் குறைகள் இருக்கலாம். நீங்களும் உங்கள் குழந்தைகளும் உல்லாசமாக பயணம் செய்ய கார் வாங்கித் தராமல் இருக்கலாம். ஓட்ட சைக்கிளில் பயணம் செய்தாலும் அவர் உங்கள் கணவர் தான். மற்றவர்கள் அதை இழிவாகப் பேசலாம். நீங்களே பேசிவது அவரை மீண்டும் மீண்டும் கொன்று புதைப்பதற்குச் சமம்.
அவருக்கும் ஆசைகள் இருக்குமல்லவா
உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுகள் தானே அவர்களுக்கும் இருக்கும். ஆண்கள் என்றும் தங்களது ஆசைகளை வெளியில் சொன்னதே இல்லை. உங்கள் கணவருக்கு பிடிக்காதது என்ன? பிடித்தது என்ன? பிடித்ததை அவர் இதுவரைக்கு செய்திருக்கிறாரா? செய்யவில்லை என்றால் அதற்கான முயற்சிகளை எடுங்கள்.
கணவரோடு விளையாடுங்கள்
வளர்ந்து விட்டோம் என்பதற்காக எல்லாம் நின்றுவிட்டதாக இல்லை. உங்கள் கணவரோடு சேர்ந்து விளையாடுவது உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும். குழந்தையாக மாறும் உங்கள் கணவரின் மனச்சுமையும் குறையும்.
நீங்கள் நீங்களா இருங்க
கணவனுக்கான மனைவியா தன்னை மாத்திக்கிறேன்னு சொல்லிட்டு உங்கள் சுயத் தன்மையை இழந்து விடாதீர்கள். அந்த விசயமும் தவறானது. சுயத்தன்மையை இழக்காமல் கணவரை புரிந்து நடந்துக் கொள்ளுங்கள்.
மையங்கனை பகுதியில் ஆதிவாசிகளின் கிராமத்தில் கடந்த மாதம் 27 திகதி 115 பேருக்கு எடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையின் போது 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்நிலையில் ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னில எத்தனின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் மையங்கனை கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் பொழுது நேற்று அவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உயிரிழந்துள்ளார்.