web log free
April 28, 2025
kumar

kumar

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(05), 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை மறுதினம்(05) சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(06) முற்பகல் 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை (NWS&DB) தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் வெள்ளை சுப்பையா.

சிவாஜி, எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டியில் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று அவர் காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்

நேற்று  11 சிறிய அரசாங்கக் கட்சிகள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரு உறுப்பினர்கள் தொடர்பில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

“முழு நாடும் சரியான பாதையில்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், இந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட சில கருத்துக்களை அங்கீகரிக்க முடியாது எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அரசாங்கத்தை விமர்சித்து இவ்வாறான கருத்துக்களை வெளியிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை தொடர்பில் கட்சியின் ஒழுக்காற்று குழுவில் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்

அரசாங்கத்தில் மக்கள் பிரச்சினை பேச களம் இல்லாததால் 11 அரசாங்கக் கட்சிகள் தனித்தனி மேடையில் நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

11 அரசாங்கக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 உறுப்பினர்களை அரசாங்கம் தனித்தனி மேடையில் நிறுத்துவது நல்ல விடயமல்ல எனவும், தன்னை இங்கு மேடை ஏற்ற அரசாங்கமே பொறுப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் நெகிழ்வாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்த சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவோ சந்தர்ப்பமாக அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 11 அரசாங்க பங்காளிகள் இணைந்து தயாரித்த ‘முழு நாடும் சரியான பாதையில்’ என்ற தேசிய விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன்-1” வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதனுடன் இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாட பெறுபேறுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செயன்முறை பரீட்சைகளை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பெறுபேறுகளை வௌியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.ஜே. தர்மசேன குறிப்பிட்டார்.

இதனிடையே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய கூடிய விலை உயர்வு பதிவாகி உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் சூடான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டதாலும், தேவை அதிகரித்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (03) பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இது பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் கூட்டமாக அமையவுள்ளது. 

நாடாளுமன்ற வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்க உறுப்பினர்கள் குழு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழமை போன்று மீண்டும் கூடவுள்ளது.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் எதிர்தரப்பு அடுத்த வாரம் மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாளை (03) நாடளாவிய ரீதியில் 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 1/2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா அலுவலக உயர் அதிகாரிகளுக்கும் 5 தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இணைய வழி சந்திப்பு நேற்றிரவு (01) நடைபெற்றுள்ளது.

ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை மீதான 46/1 பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதன் மீதான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் ஐ.நா-விற்கு நேரடியாக பயணம் செய்திருந்த வேளையில், இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஐ.நா உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான C.V.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் EPRLF கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி ஆகியோர் கந்துகொண்டிருந்தனர்.

உடல்நிலை காரணமாக தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் நா. ஸ்ரீகாந்தாவால் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கான நீதி பொறிமுறை, தண்டனையின்மை நீடிப்பு, காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதிகள், மற்றும் அரசுக்கு தேவையானவர்களுடைய விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், அக்குடும்பங்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக செயற்பாடுகள், புதிய ஏற்பாட்டில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டுதல் என்பன பற்றி தமிழ் கட்சி பிரதிநிதிகளால் ஐ.நா உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd