Homeஉள்நாட்டு செய்திமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் – ரவி கருணாநாயக்க

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் – ரவி கருணாநாயக்க

spot_img

நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசு கூறினாலும், நடைமுறையில் பணவீக்கமும் வாழ்க்கைச் செலவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக அறிவித்தாலும், பேருந்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரம் வலுப்பெற்று வருவதாக அரசு கூறினாலும், அதன் உண்மையான பலன் பொதுமக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நெல் கொள்வனவு தொடர்பில் அரசு நேரடியான பதிலை வழங்க வேண்டும் எனக் கூறிய அவர், “அப்போது ஒரு கிலோ நெல்லை 150 ரூபாய்க்கு வாங்க முடிந்திருந்தால், இன்று ஏன் அது முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

விவசாயிகளும் நுகர்வோரும் பாதுகாக்கப்படும் வகையில், கேள்வி மற்றும் வழங்கல் (Demand and Supply) அடிப்படையில் நெல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.

அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகிய இரு கட்சிகளுக்கும் வலுவான தலைமையின் தேவை இருப்பதாகக் கூறினார்.

ஜனநாயகத்தை பாதுகாக்க தேர்தல்கள் அவசியம் நடத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் மிகவும் உணர்வுபூர்வமான சம்பவம் என்பதால், அதன் உண்மைத் தன்மை குறித்து செய்தி வெளியிடும் போது ஊடகங்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் வெற்றிக்காக அனைத்து கட்சிகளும் ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

spot_img

Latest articles

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள்...

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில்...

More like this