Homeஉள்நாட்டு செய்தி2027ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்?

2027ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்?

spot_img

மாகாண சபைத் தேர்தல் தாமதத்திற்கு முந்தைய அரசாங்கங்களே பொறுப்பு – பஃப்ரல் அமைப்பு

மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாக ஒத்திவைத்தமைக்கு முந்தைய பல அரசாங்கங்களே பொறுப்புக் கூற வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கம் இந்தத் தாமதத்திற்குப் பொறுப்பல்ல என்றும் பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

இறுதியாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட சில மாகாணங்களில், பல ஆண்டுகளாக மக்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகள் காரணமாகவே தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தேர்தலை நடத்துவதில் தற்போதைய அரசாங்கத்திற்கும் பொறுப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகிய இரண்டையும் நடத்துவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய முறையைத் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இரண்டு தடவைகள் அதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, மேலும் தாமதிக்காமல் விரைவான தீர்மானத்தை எடுத்து தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறித்த குழுவும் அரசாங்கமும் விரைவாகத் தீர்மானம் எடுக்குமாயின், 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

ஞானசார தேரர் விவகாரத்தை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் – சமன் ரத்னப்பிரிய

ஞானசார தேரர் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற...

குறைபுள்ளிகள் 30ஐ எட்டும் சாரதிகளின் அனுமதிப் பத்திரம் ஓராண்டுக்கு இடைநிறுத்தம்!

சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் சாரதிகளுக்கான குறைபுள்ளி வழங்கும் முறையின் கீழ், 30 குறைபுள்ளிகளையும் பெற்றுக்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராக எடுக்கப்படும்...

பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு...

கிராமம் கிராமமாகச் செல்ல மொட்டுக் கட்சி முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் கிராமமாக முன்னெடுக்கப்படும் தொகுதிக் கூட்டங்கள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின்...

More like this