பளபளப்பான சருமம் எல்லா பெண்களும் ஆசைப்படும் ஒன்று தான். ஆனால் இப்போது உலகம் இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நம்மால் அழகு சாதன பொருட்களை வாங்கி உபயோகிப்பது சற்று கஷ்டமான விடையமே. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முக அழகை மேம்படுத்தலாம் என்றால் யார் தான் வேண்டாமென்போம்?
இன்றைய இறக்குமதி தடைப்பட்ட காலத்திலும் நம் அழகை மெருகூட்ட 2 குறிப்புகளை நோக்குவோம்.
1) தேவையான பொருட்கள்- *1 கரண்டி தயிர்
* ஆரேஞ் பீல் பௌடர் ( தோடம்பழ தோலை உலரவைத்து அரைத்து தூள் ஆக்கி எடுத்துக் கொள்ளலாம்.)
இவை இரண்டையும் சேர்த்து கலவையாக்கி முகத்தில் பூசி 20 நிமிடங்களின் பின் சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
2) தேவையான பொருட்கள்- *1 கரண்டி தயிர்
* எலுமிச்சை சாறு 2 துளி
இரண்டையும் சேர்த்து கலவையாக்கி முகத்தில் பூசி 20 நிமிடங்களின் பின் சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனை மென்மையான தோல் கொண்டவர்கள் ஒரு இடத்தில் தடவி பார்த்ததன் பின் பயன்படுத்துங்கள். ஏனெனில் எலுமிச்சை சாறு உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இதனை பயன்படுத்த வேண்டாம்.
இந்த 2 முறைகளில் எதையாவது 1முறையை கிழமையில் 2 அல்லது 3 தடவை பயன்படுத்தினால் போதும் ஆசைப்பட்டப்படி அழகிய சருமம் கிடைக்கும்.