web log free
November 21, 2024

பெண் ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு.

பெண்களை பற்றி தெரிந்து கொண்டால் அவர்களை ஊதாசீனம் செய்ய மாட்டீர்கள் .
பெண் ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது.
கால்களில் பலம் குறைச்சல். இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது.
வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள்.
ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை கூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள்.
இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனை வஸ்துக்களும் சிறியது.
புத்தகங்களை எப்போதும் நெஞ்சோடுதான் அணைத்துச் செல்வாள். ஆண்களைப் போல் பக்கவாட்டில் இல்லை.
அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது சதவீதம் வலிமை குறைவு. தொண்டை சின்னது. அதனால் கீச்சுக்குரல், இடுப்பு கொஞ்சம் பெரிசு.
அவள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு.
நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை.
மாதவிலக்கின் போதும், கர்ப்ப காலத்திலும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி பாதிக்கப்பட்டு எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவள் ஆணை விடக் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாள்.
அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள். அதிகம் கவலையும் கொள்கிறாள்.
ஆயுட்காலம் ஏறக்குறைய ஆண்கள் அளவுதான். ஆனால் அதிக தினங்கள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள். தன்னை ஒழுங்காகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாட்கள் தான் அவளுக்கு அதிகம். போதுமா.. ?
இத்தனை குறைபாடுகள் அவளுக்குள் இருப்பதால்தான் அவள் ஆணைச் சார்ந்திருக்கிறாள்.
இவ்வளவு கஷ்டத்துடன்தான் பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தோடு பின்னி பிணையப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு பெண் தன் கணவனுடைய ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறாள். கிடைக்காது போது உணர்ச்சி வயப்படுகிறாள். இதே மாதிரி கணவனும் சில வேண்டுதல் மனைவியிடம் கேட்காமலேயே எதிர்ப்பார்க்கிறான்.
இதெல்லாம் பெண்கள் பிரச்சினை இவ்வளவு கஷ்டத்துடன்தான் வாழ்க்கை அவளுக்கு இருக்கிறது...!!! ஆண்கள் சற்று யோசிப்பாேம்
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd