web log free
July 13, 2025

தவறான முடிவுகள் உங்களை அழித்துவிடும்

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். தன் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.....

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதி நிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் எனெனில்.... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது...?

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால்
"எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......

நாமும் அப்படித் தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

ஆனால் நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது''.

Last modified on Monday, 24 January 2022 09:27
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd