web log free
November 23, 2024

தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

தயிர் உடலுக்கு தேவையான ஒரு அருமருந்து. சிலருக்கு தயிர், மோரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு உள்ளே இறங்காது.

தயிர் நமது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும், எலும்புகளுக்கு வலுவும் சேர்க்கின்றது.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் லாக்டோ இருக்கிறது. தயிரில் லாக்டோபேசில் என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால் தான்.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் பச்சடியை சாப்பிடுகிறோம்.

இளம் பெண்கள் தயிர் சாப்பிடுவதால், அவர்களின் உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

அல்சர் பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அல்சருக்குக் காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச்சத்துக்களும் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

Last modified on Saturday, 05 February 2022 17:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd