web log free
February 01, 2025

காதல் உணர்வை தூண்டும் உணவுகள்

காதல் தவிர்க்க முடியாதது. இயற்கையாக எழும் உணர்வும் கூட. பசி, தாகம் போல காதலும் நமக்கான உணர்வுதான். அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலை சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கும். காதலில் கசிந்துருக உடலுக்கும், மனதுக்கும் சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலை தூண்டும் உணவுகள் பற்றி பார்ப்போமா...
தக்காளி -காதலுணர்வையும், பாலுணர்வையும் தூண்டக்கூடிய சத்துக்கள் இதில் உள்ளதால், ‘லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது.

கிவி- இதில் போலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தை பேறுக்கு திட்டமிடும் பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய பழம் இது. உடலுக்கு சக்தி கொடுக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.

லெட்யூஸ்- முட்டைகோஸ் போன்ற தோற்றமுடைய இது பல வகை வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரை. இதன் சாறு, நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடியது. பதற்றம், பயம், கவலை ஆகியவை நீங்கி நல்ல உணர்வுகளை உருவாக்கும். காதல் உணர்வை தூண்டும்.

பட்டாணி- ‘மூட் ஸ்விங்ஸ்’ என்று சொல்லக்கூடிய இது மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளை போக்கும் தன்மை உண்டு. இதுவும் அந்த வகையை சேர்ந்ததுதான். மனச்சோர்வை குறைப்பதுடன், காதல் உணர்வுக்கும் வழி அமைத்துக் கொடுக்கும்.

மாதுளை -மாதுளையைப் பழமாகவோ, ஜூஸாகவோ தொடர்ந்து அருந்தி வர, ஆண்களின் உடல் வலிமை பெறும். காதலுக்கு மட்டுமல்ல, இல்லற வாழ்க்கைக்கும் மிகவும் ஏற்றது.

டார்க் சாக்லேட்- செரோட்டொனின் என்ற ஹார்மோனை தூண்டுவதில் டார்க் சாக்லேட்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தை அளித்து, ரத்த நாளங்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். இதனால், பாலியல் உணர்வை சீராக தூண்ட உதவும்.

காபி-காபியில் உள்ள காபின் தற்காலிக எனர்ஜியைத் தரக்கூடியது என்பதால் ஆண், பெண் இருவருமே பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத காபியை அருந்தலாம். காதல் உறவுக்கு எனர்ஜி தரும் அற்புத பானம் இது.

தர்பூசணி- இந்தப் பழத்தை, ‘நேச்சுரல் வயாகரா’ என சொல்லலாம். இதில், அமினோ ஆசிட் சிட்ருலீன் எனும் சத்து, வயாகராவுக்கு இணையான பலன்களை தர வல்லது.

ஆப்பிள்- ஆப்பிளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பாலி பீனால்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட் ஆகியவை காதல் உணர்வை தூண்டக்கூடியவை. உடலுக்கு அதிக சக்தியை தரக்கூடியவை. இது, திருமணமான பெண்களுக்கு மிகவும் நல்லது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd