web log free
May 12, 2025
kumar

kumar

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான அதன் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 202 கைதிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று முன்தினம் (06) இரவு பத்து மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த அரலகங்வில, மானம்பிட்டிய, வெலிகந்த, ஹிகுராக்கொட, புலஸ்திகம பொலிஸ் நிலையங்களில் இருந்தும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற கலவரச் சம்பவம் தொடர்பில் 201 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் 514 கைதிகள் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எனினும் மேலும் 30 கைதிகளை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுங்கத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் வரி திணைக்களத்தின் வெற்றிடங்களுக்கு தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த திணைக்களங்களின் சேவை விதிகள் மீறப்படாத வகையில் அமைச்சரவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் போட்டிப் பரீட்சை மூலம் இந்த ஆட்சேர்ப்புகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் தற்போது 773 வெற்றிடங்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 434 வெற்றிடங்களும் உள்ளன.

மதுவரித் துறையில் 331 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில், ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 60 ஆகக் குறைத்துள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த மற்றொரு குழுவானது டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஓய்வு பெற உள்ளது.

தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் தற்போது அரச சேவையில் கடமையாற்றும் திறமையான பட்டதாரிகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே அரசாங்கத்தின் நம்பிக்கை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உத்தேச அமைச்சரவைத் திருத்தத்தின் பிரகாரம் புதிதாக 7 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்களை நியமிக்க முடியும் எனினும் முதற்கட்டமாக 7 பேர் மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் குறித்த நியமனங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு நியமிக்கப்படக்கூடிய மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகும். அவர்களில் 18 பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவியேற்கவுள்ள அமைச்சர்களில் 06 பேர் மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்குமென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

நவம்பர் மாதம் வட மாகாணத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கும் மக்களுக்காக பாதுகாப்பு தரப்பினர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

மாவீரர்களை கொண்டாடும் பேரில் பயங்கரவாதிகளையோ அல்லது அந்த அமைப்பையோ பிரசாரம் செய்தாலோ அல்லது ஆடம்பரமாக கொண்டாடினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்படும் என வடமாகாண பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 26ஆம் திகதி எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவர் வேலுப்பில பிரபாகரனின் பிறந்தநாளும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுவதும் யுத்த காலத்துக்கு முற்பட்டது.

போருக்குப் பின்னர், வடக்கின் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் போரில் உயிரிழந்த மாவீரர்களின் குடும்பங்களை நினைவு கூர்வதாகக் கூறி மாவீரர்களைக் கொண்டாடினர்.

எனினும் இந்நாட்களில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவீரர்களை கொண்டாடும் மக்கள் புதை நிலத்தைச் சுத்திகரித்து மாவீரர் துயிலுமில்லங்களை நடத்துகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி கனகபுரத்தில் மாபெரும் மாவீரர் வைபவம் இடம்பெறும் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நினைவுச் சின்னங்கள் உள்ள இடத்தை துப்பரவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர்ன் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் தனுஷ்க குணதிலக்க யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான தகவல்கள் நேற்று (06) பதிவாகியுள்ளன.

சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான யுவதியொருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பில் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த சுமார் 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது.

தப்பிச் சென்றவர்களைக் கண்டுபிடிப்பதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

லிற்றோ காஸ் சிலிண்டர்களின் விலைகள் இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் காஸின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறையை உடைய காஸ் சிலிண்டரின் ஒன்றின் விலை கொழும்பு மாவட்டத்துக்குள் 4,360 ரூபாயாகும்.

5 கி​லோ கிராம் சிலிண்டரின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 1,750 ரூபாயாக விற்கப்படும்.

2.3 கிலோ கிராம் காஸ் சிலிண்டரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய விலை 815 ரூபாயாகும்.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த புதிய விலைகள் இன்று (06) இரவு முதல் அமலுக்கு வரும்.

12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200-250 வரை உயரும்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், எரிவாயு விலையில் திருத்தம் இன்று (06) இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது நிறுவனத்திலும் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 44/3 பிரிவின்படி, பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன ஜனாதிபதியின் பொறுப்பில் வைக்கப்பட உள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd