web log free
November 25, 2024

இன்று பரவலாக பேசிவரும் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று G20 சர்வமத மாநாடு! பலருக்கு தெரியாத சிலருக்கு தெரிந்த G20 மாநாட்டின் முக்கியத்துவம் தெளிவாக பாமரர் புரியும் வண்ணம் நோக்கினோமானால்,

1999 வரை G8 நாடுகளாக இருந்த அமைப்பு 1997ல் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியால் G20 நாடுகளாக மாற்றமடைந்தது.

G8 என்பதை "Group of eight" என பொருள் கொள்ளலாம். பிரான்சு, அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளே G08 நாடுகள் சபையில் அங்கம் வகிக்கித்தது. பின் 1999 ல் செப்டம்பர் மாதம் 26ம் திகதி G20 நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டது.

G20 நாடுகள் சபையில் G08 நாடுகள் உட்பட பணபலம்,ஆட்பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் 12 நாடுகளும் இணைந்து கொண்டது.

G20 நாடுகளாக அர்ஜென்டினா, அமெரிக்கா, கொரியகுடியரசு, அவுஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இடம் பிடித்துள்ளது.

உலகின் முக்கிய பொருளாதாரம் அபிவிருத்தி மற்றும் போர் யுக்திகள் தொடர்பில் ஒன்றினைந்து கலந்துரையாடி சீரமைக்கும் சர்வதேச மன்றமே G20 அமைப்பு.

இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதமும் உளகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதமும் உலக மக்கள் தொகையில் 60 சதவீதமும் பங்களிப்பு வழங்கும் 20 நாடுகளே G20 நாடுகள் அமைப்பு கொண்டுள்ளது.

இவ்வமைப்பிற்கு நிரந்தர செயலகம் என்று ஓர் இடத்தை குறிப்பிட முடியாது. இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பு சுழலும் நாற்காலி போல் வருடாவருடம் மாறுப்படும். தலைமைப் பொறுப்பை யார் முன் வந்து ஏற்கிறாரோ அவரே அடுத்த ஆண்டு வைபவத்தை கூட்ட வேண்டும்.

தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு ஏனைய G20 அல்லத நாடுகளையும் கூட்டத்திற்கு விருந்தினராக அழைக்கலாம். வருடாவருடம் அழைப்பின் பேரில் பல நாடுகளின் தலைவர்கள் அல்லது துணை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வது வழக்கம்.

சாதாரண கூட்டமாக நடந்தேறிய நிகழ்வு 2008 முதல் உச்சி மாநாடாக மாற்றம் செய்யப்பட்டது.

இக்கூட்டணியில் குழு மற்றும் தனிப்பட்ட போச்சு வார்த்தைகளும் நடைபெறும். இங்கு உலகின் முக்கிய பொருளாதார முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வமைப்பின் முக்கிய முடிவுகளுள் குறிப்பிடத்தக்க முடிவாக 2008ல் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2009ல் G20 மாநாட்டில் 5 லட்சம் கோடி டாலர் தொகையை உலக பொருளாதாரத்தில் புலக்கத்தில் விடப்பட்டது. இந்த முடிவால் அக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சீராக்க முயன்றது.

2019 ஜப்பானில் ஒசாகாவில் நடை பெற்ற G20 மாநாட்டில் பொண்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அன்று முதல் G20 மாநாட்டில் கருப் பொருளுள் பொண்ணியம் என்பதும் சேர்க்கப்பட்டது.

2020 சவூதி அரேபியாவில் நடைபெற இருந்த மாநாடு கொரோனா காரணமாக இணையம் வழியாக நடைப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 இத்தாலியில் ரோம் நகரில் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டிய கூட்டம் இத்தாலியின் பொலஞா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றவண்ணம் உள்ளது. இதில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் விருந்தினராக கலந்து கொண்டுள்ளது.

நோர்டிக் நாடுகள் உட்பட பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் இதுவரையில் G20 மாநாட்டில் கலந்து கொண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் G20 நாடுகளிடம் 25.4 பில்லியன் தொகை கடன்பட்டிருப்பதே இம்மாநாட்டில் கலந்துக்கொள்ளாததற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.

2021 உச்சி மாநாட்டிற்கு அல்கேரியா, நியுசிலாந்து, புருனை, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ருவாண்டா, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் G20 சர்வமத மாநாட்டின் முன்னாயத்த வைபவத்தில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதமர் கௌரவ புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மதிப்பிற்குரிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் " ஒரு தேசத்தின் ஒற்றுமையிலே எதிர் காலம் தங்கியுள்ளது" என தனது பிரதான உரையை ஆரம்பித்தார்.

அவரது உரையிலே " கலாச்சாரங்களுக்கிடையே சமாதானம் மதங்களுக்கிடையே புரிதல் " என்ற கருப்பொருளை மையமாக வைத்து உரையாற்றினார்.
" என்னை இந்த வரலாற்று சிறப்புமிக்க இத்தாலியின் பொலஞா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் G20 சர்வமத மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த இத்தாலியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் பேராசிரியர் அல்படோ மெலொனி உள்ளிட்ட குழுவிற்கு நன்றி கூறுகிறேன்" என்ற கூற்று முதன்மைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

தெற்காசியவின் புவியியல் வலையமான இலங்கை இம்மாநாட்டின் தொனிப்பொருளுள் அமைந்திருப்பது எமக்கு பெருமையான ஒன்றாகும்.  இன மத ஒற்றுமை எமது நாட்டின் முக்கிய அம்சமாகும். தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடைய வன்முறை சம்பவங்கள் என்பன நமது யுகத்தின் சவால். முழு உலகும் தற்போது எதிர் நோக்கியுள்ள கடுமையான சுகாதார நெருக்கடி நம் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு உதவியுள்ளது. கொரோனா தொற்றானது பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் நாகரிகங்கள் வேறுபாடு இன்றி முழு உலகையும் கலங்கச் செய்துள்ளது. கடந்த கால நடந்து முடிந்த விடையங்களை பற்றி பேசாமல் இனி உலகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை பற்றி கலந்துரையாட வேண்டும் என பிரதமர் கௌரவ ராஜபக்ஷ அவர்கள் தன் உரையில் கூறியிருந்தார்.

இன்று கொழும்பில் 21 கம்பஹாவில் 26 களுத்துறையில் 24 குருநாகலில் 9 புத்தளத்தில் 2 நுவரெலியாவில் 7 மாத்தளையில் 1 பதுளையில் 14 மொனராகலவில் 12 காலியில் 4 மாத்தறையில் 9 ஹம்பந்தொடவில் 12 ரத்தினபுரியில் 3 கேகாலவில் 5 அநுராதபுரத்தில் 8 யாழ்பாணத்தில் 40 கிளிநொச்சியில் 4 முல்லைதீவில் 3 மன்னாரில் 3 வவுனியாவில் 12 திருகோணமலையில் 16 மட்டக்களப்பில் 31 மற்றும் அம்பாறையில் 27 என நாடு முழுவதும் 297 தடுப்பூசி மையங்கள் செயற்பட்டவண்ணம் இருப்பதாக சுகாதார வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மொத்தமாக 147114 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் மொடோனா தடுப்பூசியின் 1வது டோஸ் 30 பேருக்கும் 2வது டோஸ் 1815 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் சைனபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 51798 பேருக்கும் 2வது டோஸ் 88700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் 1வது டோஸ் 3194 பேருக்கும் 2வது டோஸ் 839 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் 1வது டோஸ் 353 பேருக்கும் 2வது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று நேரத்திற்கு முன் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் முன்னிலையில் இராஜினாமா செய்துள்ளார். நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தது  இலங்கை மத்திய வங்கி ஆளுநரான W.D. லக்ஷ்மன் அவர்களின் ஓய்வின் பின் பதிலாளுனராக  தான் பொறுப்பேற்கவே என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்கு முன் அனுராதபுரத்தில் மத சடங்குகளில் ஈடுபட்டார். அவர் இந்த வாரம் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20 ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பதிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் கிங்ஸ்லீ ரத்னாயக மற்றும் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளனர்.

அதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கரகொட, யக்கலமுல்லாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தை பிறக்கும்போதே இறந்துள்ளது.

குழந்தையின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்திய காலி, கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் பிரேத பரிசோதகர் சந்திரசேன லோகுகே, குழந்தையின் உடல் பாகங்களை மேலதிக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மரணம் குறித்து நேற்று வெளிப்படையான தீர்ப்பை வழங்கினார்.

இம்மாதம் 5 ஆம் திகதி குழந்தை பிறக்கவிருந்த நிலையில், அவர் 2 ஆம் திகதி காலியில் உள்ள மகமோதரா மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குழந்தையின் தாய் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 5 ம் தேதி அவருக்கு குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது

இறந்த பிறகு குழந்தைக்கு பிசிஆர் செய்யப்பட்டது. இந்த சோதனையில், குழந்தைக்கு கோவிட் வைரஸ் பாதிக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தாய் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் ஏற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 2 of 4
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd