web log free
May 20, 2024
kumar

kumar

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 2ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, ஆட்சேர்ப்பு நேர்முக பரீட்சைகள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும்.

இன்று கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வரவுள்ள நிலையில் இவ்வாறு பாதைகள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையிலான அதிவேக வீதி இன்று(24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்றிரவு (23) விசேட ஊடக அறிக்கை ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த காலப்பகுதியில் அதிவேக வீதியில் இருந்து பேலியகொடை, ஒருகொடவத்தை சந்தி, தெமட்டகொடை, பொரளை, D.S.சேனநாயக்க சந்தி, ஹோட்டன் சதுக்கம், ஹோட்டன் சுற்றுவட்டம், கிறீன் பாத், நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை, புனித மைக்கல் வீதி, காலி வீதியில் இருந்து கோட்டை வரையான மார்க்கம் மற்றும் ஹில்டன் ஹோட்டல் வரையிலான மார்க்கம் ஆகியன மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மொரகஹஹேன, மில்லவ பகுதியில்  உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தமக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மே தின அமைப்பாளர் பதவியும் தமக்கு கிடைக்கும் என தெரிவித்த அவர், இந்த மே தினத்தை அனைத்து தரப்பினரும் உயர் மட்டத்தில் கொண்டாடவுள்ளதாக தெரிவித்தார்.

இபோச பஸ்களை பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் சிறிகொத்தில் இருந்து செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உணவு மற்றும் பானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்தவுடன் குடிக்காமல், திரும்பி வரும்போது குடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் மே தினக் கூட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்காத ஒருவருக்கு பதில் தலைவர் பதவி வழங்குவதை சட்டங்கள் தடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இது தொடர்பில் நாளை நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் பொலிட்பீரோ தற்போது இரண்டாக பிரிந்து இரு கட்சிகளும் செயல் தலைவர்களை நியமித்துள்ளன.

இரண்டு நியமனங்களும் சட்டவிரோதமானது என இரு தரப்பினரும் குற்றம் சுமத்தியமையும் விசேட அம்சமாகும். 

இதேவேளை, கட்சித் தலைமையகத்தின் செயற்பாடுகளை இரு தரப்பினருக்கும் தடைசெய்து, அனைத்துக் கூட்டங்களும் அதற்கு வெளியில் நடத்தப்பட வேண்டுமென மருதானை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களை வலுவூட்டலானது SDB வங்கியின் அதன் துவக்கம் முதலான வியாபாரத்திற்கான அணுகுமுறையின் மையமாக விளங்குவதுடன் அதனது நிறுவன சிந்தனாதளத்திலும் ஆழமாக வேரூன்றிய அம்சமாகவும் காணப்படுகின்றது.

வங்கியின் வெற்றிகரமான இருமுக அணுகுமுறையானது நிறுவனத்திற்குள்ளிருந்து பெண்களை வலுப்படுத்தல் மற்றும் வெளியிலிருந்து பெண்களிற்கு ஆதரவளித்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

இவ்வர்ப்பணிப்பானது சமத்துவம், பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கல் என்பவற்றிலான வங்கியின் விளம்பரப்படுத்தல்களில் சான்றாவதுடன் உயர் தலைமைத்துவ பதவிகளிலான குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தினையும் உள்ளடக்கியதான 48% பெண்களாகக் காணப்படும் அதனது ஊழியப்படையின் உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

தேசம் முழுவதிலுமான பெண்களை வலுவூட்டுவதற்கு அதனது பரந்த பயணத்துடனாக நிறுவனத்திற்குள்ளான பெண்களை அங்கீகரிப்பதற்கும் அஞ்சலி செலுத்துவதற்குமான அதனது முயற்சிகளை பிணைப்பதான, ஒரு தனித்துவமான இலத்திரனியல் ஊடக பிரச்சாரத்தினை மாதம் முழுவதிலுமாக செயற்படுத்தியுள்ளமையினால் மார்ச் மாதமானது SDB வங்கிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவமிக்கதாக விளங்கியது.

இப்பிரச்சாரத்தின் ஊடாக, வீரமும் அர்ப்பணிப்பும் மிக்க கதைகளை பகிர்ந்தும், எதிர்ப்பின் பலமிக்க செய்தியை வழங்கியும் SDB வங்கியானது தங்களது நிலைகளிலான பெண்களது அளப்பரிய பங்களிப்புக்களை காட்சிப்படுத்தியிருந்தது.

பிரச்சாரத்தின் ஊடாக வலுவினதும் எதிர்ப்பினதும் செய்திகளை வெளிப்படுத்தியதன் நோக்கமானது அக்கருத்தானது அமோக வரவேற்பினைப் பெற்றும் சமூக ஊடகங்களில் நாடளாவிய ரீதியில் உயர் ஆரோக்கிய அடைவுகளைப் பெற்றுக்கொண்டமையினாலும் அமோக வெற்றியினை அடைந்திருந்தது. பரந்தவொரு பெறுநர்களுடன் பொருளார்ந்த தொடர்புகளை ஏற்படுத்திய இக்கதைகளானவை பல பெண்களில் ஒத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த பலவருடங்களாக பெண்களை வலுவூட்டுவதனை, குறிப்பாக இலங்கை முழுவதிலுமான பெண் சுயதொழில் வாண்மையாளர்களிற்கான அதன் ஆதரவினை மீள்வரையறுப்பதிலான வங்கியினது தற்போதைய முயற்சிகளிற்கான ஒரு ஊக்கமாக இவ்வெற்றியானது எதிர்பார்க்கப்பட்டது.

கிராமப் புறங்களில் சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில்வாண்மையாளர்களை முடுக்கிச்செல்லும் ஒரு முக்கிய சக்தியாக, SDB வங்கியானது ஆயிரக்கணக்கான சுயதொழில் வாண்மையாளர்களை அடையாளப்படுத்தல், கல்வியளித்தல், வழிகாட்டுதல் மற்றும் அவர்களது வெற்றிக்குத் தேவைப்படும் நிதியுதவிகளை வழங்குதல் என்பவற்றினால் இலங்கைப் பெண்கள் மத்தியில் சுயதொழில்வான்மையை வினையூக்கப்படுத்தியுள்ளது.

இம்முயற்சிகள் சர்வதேச அங்கீகாரங்களை தேடித்தந்துள்ளதுடன், பெண்களது வலுவூட்டல் துவக்கங்களிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட யுஎஸ் இன்டர்நேஷனல் டிவலெப்மென்ட் பினான்ஸ் கோர்ப்பரேஷனிடமிருந்து (ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்) 40 மில்லியன் அ.டொலர் மானியத்தினை சமீபத்தில் பெற்றுக்கொண்டமை போன்ற கணிசமான பால்நிலை நிதியிடல்களில் விளைவினை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களது வலுவூட்டலிற்கான வலுவான அர்ப்பணிப்புடன், SDB வங்கியானது பெண்கள் வெற்றிகொள்வதற்காக வலுவூட்டப்படும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அர்த்தமிகு பங்களிப்புக்களை வழங்கும் மிகவும் உள்ளீர்ப்பும் சமத்துவமும் நிலவும் சமூகமொன்றினை வளர்த்தெடுப்பதினை நோக்கிய முக்கிய நகர்வுகளை மேற்கொள்வதனைத் தொடர்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதாக சொல்லி ரவுடித்தனம், காடைத்தனம் செய்கின்றதா என்று கேட்க விரும்புகிறேன்.

தனது அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான இந்த தொழிற்சங்கத்துக்கு பொது வெளி போராட்டங்களின் போது மது போதையை தவிர்த்து, ஒழுக்கத்துடன், சட்டம் ஒழுங்கை கடை பிடிப்பது பற்றி அறிவுரை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்ளவும் விரும்புகிறேன்.

இதுபற்றி சற்று முன் சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் டிரான் அலசிடம் உரையாடி, இந்த வன்முறை காடையர்கள், வேலுகுமார் எம்பியை வன்முறையில் கொல்லப்பட்ட எம்பி அமரகீர்த்தியின் நிலைமைக்கு தள்ளிவிட முயல்கிறார்களா என்று கேட்டேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். 

கண்டி புசல்லாவையில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி எம்பி வேலு குமார் மீது, இதொகா அங்கத்தவர்கள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி பற்றி இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,   

இதொகாவின் சிரேஷ்ட உபதலைவர் என்று சொல்லப்படும் செல்லமுத்து என்பவர் மற்றும் அவரது மகன்கள் என்று சொல்லப்படும் நபர்கள் தொழிற்சங்க போராட்டம் என்ற பெயரில், நேற்று கண்டி மாவட்ட புசல்லாவையில், தனது தொகுதி மக்கள் பணி தொடர்பில் பயணித்த எமது தமுகூ கண்டி மாவட்ட எம்பி வேலுகுமாரை தாக்க முயன்று, தூஷண வார்த்தைகளால் பேசி, பயமுறுத்தல் விடுத்துள்ளார்கள். இது தொடர்பான காணொளி தற்போது பொது வெளியில் பரவலாக உள்ளது. 

இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதாக சொல்லி காடைத்தனம் செய்கின்றதா என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. இவர்களின் இந்த போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் தொழிற்சங்க போராளிகள் அல்ல, ரவுடித்தனம் செய்யும் மது போதை காடையர்கள் என்ற என்ற பதிலும் இயல்பாக கிடைகின்றது. 

இது தொடர்பில் வேலுகுமார் எம்பியை, கண்டி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரிடம் முறையீடு செய்யும்படியும், நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பும்படியும் கூறியுள்ளேன். மேலும் இதுபற்றி சற்று முன் சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் டிரான் அலசிடம் உரையாடி, இந்த வன்முறை காடையர்கள், வேலுகுமார் எம்பியை வன்முறையில் கொல்லப்பட்ட எம்பி அமரகீர்த்தியின் நிலைமைக்கு தள்ளிவிட முயல்கிறார்களா என்று கேட்டேன்வன். வேலுகுமார் எம்பியை தூஷண சொற்களை பயன் படுத்தி பேசி, பயமுறுத்தி, ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவரை தனது கடமைகளை செய்ய விடாமல் தடுத்த நபர்களின் அடையாளங்கள் காணொளியில்  உள்ளன. அதன்படி அவர்களை உடன் கைது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியுள்ளேன். 

1,700 ரூபா நாட்சம்பளம், பத்து பேர்ச் காணி, தனி வீடு, பல்கலைக்கழகம் என்று வரிசையாக மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்து விட்டு, அவற்றை இந்த திகதிக்குள் பெற்று தருவோம் என்று காலகெடுவையும் அறிவித்து விட்டு, இன்று சொன்னபடி எதையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதால், இயலாமை என்ற விரக்தி உணர்வால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுமாறுகிறது. இந்த தோல்விகளுக்கு நாம் காரணம் அல்ல.

தமிழ் முற்போக்கு கூட்டணி, சம்பள நிர்ணய சபையிலும், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் அங்கம் வகிக்கவில்லை. எனினும் இந்நிலையிலும் கூட நாம், தொழிற்சங்க போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவே உள்ளோம்.  அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

ஆனால், சம்பள நிர்ணய சபையிலும், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் ஏற்கனவே தம்முடன் கூட அமர்ந்து பேசும் வேறு பல தொழிற்சங்கங்களுக்கு கூட அறிவிக்காமல் போராட்டங்களை  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தன்னிச்சையாக நடத்துகிறது என அந்த தொழிற்சங்கங்களே தெரிவிக்கிறார்கள்.  இத்தகைய தவறுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர்க்க வேண்டும். சரியான திட்டமிடம் இன்மையால் வன்முறை தலை தூக்குகிறது. இதற்கு எக்காரணம் கொண்டும் நாம் இடமளிக்க முடியாது.    

ஞாயிற்றுக்கிழமை (21) தியத்தலாவையில் இடம்பெற்ற “Fox Hill Super Cross 2024” பந்தய நிகழ்வில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் கொடி மார்ஷல்களாக பணியாற்றிய நான்கு பந்தய நிகழ்வு அதிகாரிகளும் பார்வையாளர்களாக இருந்த பொதுமக்களும் அடங்குவர்.

அவர்களின் விபரம் வருமாறு 

1. வெலிமடையைச் சேர்ந்த 8 வயதுடைய சிவகுமார் தனுஷிகா

2. சீதுவையைச் சேர்ந்த 19 வயதுடைய சமத் நிரோஷன்

3. அகுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஷான் ஹீனடிகல

4. அவிசாவளையைச் சேர்ந்த 32 வயதான ரசிக அபேநாயக்க, விடுமுறையில் இருந்த இராணுவ சிப்பாய்

5. வெலிமடையைச் சேர்ந்த 55 வயதான முத்துசாமி உதயகுமார்

6. மாத்தறையைச் சேர்ந்த 62 வயதான அருண உபாலிகமகே

7. மாத்தறையைச் சேர்ந்த 60 வயதான கணேஷ் கமலநாத்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பணிப்புரையின் கீழ், சமகி ஜன பலவேகவின் ஆறு உறுப்பினர்களுக்கு 3200 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அபிவிருத்தி பணிகளுக்காக பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டுக்கான பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு மேலதிகமாக, நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன்படி, சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட 85 திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபாவாகும்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.  பௌசி சமர்ப்பித்த 89 திட்டங்களுக்கு ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்ட தொகை 08 கோடி ரூபாவாகும்.

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் 708 திட்டங்களுக்கு 10 கோடி ரூபாவை விடுவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் 85 திட்டங்களுக்காக விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபா.

சமகி ஜன பலவேகவின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் கலாநிதி காவிந்த ஹேஷான் ஜயவர்தனவின் 34 திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை 07 கோடி ரூபா.

சமகி ஜன பலவேகவின் காலி மாவட்ட சபை உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவின் 25 திட்டங்களுக்காக விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபா.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 29.12.2023 திகதியிட்ட சுற்றறிக்கை இலக்கம் MF/02/2023 இன் விதிமுறைகளுக்கு இணங்க இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

மூத்த ஜோதிடர் சந்திரசிறி பண்டார இன்று (22) காலை காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

சந்திரசிறி பண்டார இறக்கும் போது அவருக்கு வயது 63.