web log free
November 25, 2024

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சகுரா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நேற்று (11) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.

செஸ்னா 172 இலகுரக விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் இரண்டு சந்தர்ப்பங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை மற்றும் அவை மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி :

மூன்று சகுரா முதலாளிகள் கைது

மற்றுமொரு விமானம் கிம்புலாபிட்டியவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது: நால்வர் வைத்தியசாலையில்

அவசரமாக தரையிறங்கிய விமானத்தை வைத்திருந்த நிறுவனம் வேலை செய்வதை நிறுத்தியது.

பயாகலா கடற்கரையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

மாகாண சபைகளின் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கும் அதிகாரம் மாகாண சபைகள் அமைச்சருக்கு சட்டம் வழங்கியுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

டிசம்பர் (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இதுவரை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை, அதுவும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மாகாண சபைகள் அமைச்சருக்கு தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதற்கு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மக்களின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என்பதால் கூடிய விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

“முந்தைய அரசாங்கத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட வடக்கு மக்களின் பெரும் பகுதியை நாம் இழந்துள்ளோம். மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும், மேலும் அவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதால் எங்களுக்கு ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும்,” என்று கொடஹேவா கூறினார்.

தேர்தலை தவிர்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்விலும் இத்தகைய மகத்துவம் கொண்ட ஒருவரால் வழிகாட்டப்பட்டதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்த எனது அன்புச் சகோதரரே, உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! என அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தனது சகோதரரும் இந்நாட்டு பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், இன்று குடும்பத்தில் ஒரு சிறப்பு நாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தி. நீங்கள் எங்களை இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தியதன் மூலம், Y.K. ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ மற்றும் எனக்கு ஒரு உத்வேகமாகவும் சிலையாகவும் இருந்தீர்கள். நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

 

மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்றிரவு (10) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அம்பேபுஸ்ஸ சந்தியில் திரும்பி குருணாகல், மாவத்தகம, கலகெதர, கட்டுகஸ்தொட்ட ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர மாவனெல்லை நகரின் எஸ் ஓ சந்தியின் வலதுபுறமாக திரும்பி ஹெம்மாத்தகம, அம்புலுவாவ, கம்பளை, பேராதனை ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களும் இந்த வீதிகளை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) தலைமையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்காத 30 கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் பொதுவான கூட்டமைப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் செயற்படுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இன்று முதற்கட்ட பேச்சுவார்தையில் ஈடுபடவுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய ஆளும் அரச தரப்பில் பல்வேறு உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டுவரும்  நிலையில், பங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்காத 30 கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் மைத்திரி தரப்புடன் இணைந்து பயணிக்க இருப்பதான செய்தி  அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 7
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd