முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று சக்கர நாற்காலியில் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த அவர், அதிகாரிகளின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்த நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளையும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளையும் அவர் எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இன்றைய கைது நடவடிக்கை எந்தவொரு குறிப்பிட்ட விசாரணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.




