தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இலங்கை மக்களுக்கு இல்லை என தான் நம்புவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
“இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற தேவை பொதுமக்களாகிய உங்களில் யாருக்காவது இருக்கிறதா? பொதுமக்களுக்கு அவ்வாறான எந்தவொரு தேவையும் இல்லை என்பதே எமது நம்பிக்கை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நீதித்துறையில் காணப்படும் தாமதங்களைக் குறைத்து, மக்களுக்கு விரைவாகவும் நியாயமான முறையிலும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் எதிர்பார்க்கும் நீதியான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், நீதித்துறையை மேலும் திறம்பட செயல்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மேலும் வலியுறுத்தினார்.




