Homeஉள்நாட்டு செய்திநீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

spot_img

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக ‘தினன தகுண கூட்டு’ தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறான கருத்துகள் மூலம் உச்ச நீதிமன்றத்தின் பணிகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தப்படுவதாக வலியுறுத்தியுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி பல தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு “எந்த வகையிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாது” என தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தை ‘தினன தகுண கூட்டு’ கடுமையாக கண்டித்துள்ளது.

குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடவுள்ள நிலையில், பொறுப்பான அமைச்சரொருவர் இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து கருத்துகளை வெளியிடுவது சுயாதீன நீதித்துறை செயல்முறைக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தமாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னரும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இதேபோன்ற கருத்தொன்றை வெளியிட்டிருந்ததை நினைவுபடுத்தியுள்ள ‘தினன தகுண கூட்டு’, நீதித்துறை செயல்முறைக்கு அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

Latest articles

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

ரணிலின் ஆதரவில் சஜித் ஜனாதிபதி ஆவார்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரே அரசியல் அணியிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டதே தோல்விக்கான பிரதான காரணமாக அமைந்ததாகவும், மீண்டும்...

மஹிந்த லஞ்ச வாங்கிய காசோலை இலக்கம் எங்கே?

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளது என முன்னாள்...

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு – வெளிப்படை விசாரணை வேண்டும்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு...

More like this