Homeஉள்நாட்டு செய்திகலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜர்

கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜர்

spot_img

தலைமறைவாகிவிட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை உயர் நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அந்தச் செய்திகளை மறுத்த ஞானசார தேரர், தான் நாட்டை விட்டு ஓடவில்லை என்றும், சட்டத்தை மதித்து நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷ.!

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப் பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி...

அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தால் பிரதமர் ஹரிணி அமரசூரிய மௌனம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு, அவருக்கு அரசியல் அதிகாரம்...

உலக சந்தையில் எரிசக்தி விலை உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

உலக சந்தையில் எரிசக்தி விலைகள் வேகமாக அதிகரிப்பதால், இலங்கை போன்ற எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாடுகளின் இறக்குமதி செலவுகள்...

மழை நீடிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும்...

More like this