சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் 2027 மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் போது, அதிலிருந்து வெளியேற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
‘ரතු ඉර’ (Rathu Ira) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
“IMF உடனான இந்த ஒப்பந்தத்திலிருந்து அடுத்த ஆண்டு வெளியேறுவோம். ஆனால், எதிர்காலத்திலும் IMF உடன் தொடர்ந்து பணியாற்றுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நான்கு வருட EFF திட்டம் 2023 மார்ச் 20ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டதுடன், 2027 மார்ச் 19ஆம் தேதி நிறைவடைய உள்ளது.




