Homeஉள்நாட்டு செய்திடீசல் லீற்றருக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை மானியம் வழங்க அரசு பரிசீலனை

டீசல் லீற்றருக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை மானியம் வழங்க அரசு பரிசீலனை

spot_img

இந்த மாத இறுதி முதல் டீசல் லீற்றர் ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையிலான மானியத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உள்ளிட்ட எரிபொருள் விற்பனையாளர்கள், எரிபொருள் விற்பனையின் மூலம் எதிர்கொண்டுள்ள நட்டம் தொடர்பான தரவுகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தரவுகளை ஆய்வு செய்த பின்னர், டீசலுக்கு வழங்கப்படவுள்ள துல்லியமான மானியத் தொகை தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் விலைகளை முடிந்தவரை தொடர்ந்து பேணுவதுடன், டீசல் விலை அதிகரிப்பைத் தடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் தற்போது உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. WTI சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை சுமார் 92.41 அமெரிக்க டொலராகவும், பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 104.03 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

spot_img

Latest articles

சட்டப்படி மட்டுமே Leasing வாகனங்களைக் கைப்பற்ற முடியும்

நிதி மற்றும் குத்தகை (Leasing) நிறுவனங்கள், தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறியவர்களின் வாகனங்கள் அல்லது உபகரணங்களை மீண்டும் கைப்பற்றும்போது...

2027 மார்ச் மாதத்துடன் IMF திட்டத்திலிருந்து வெளியேற அரசு தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம்...

ஜப்பான் மற்றும் ருமேனியா வேலைவாய்ப்புகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு கட்டாயப் பதிவு

ஜப்பான் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காக முதல் முறையாக வெளிநாடு செல்லும் இலங்கைப் பணியாளர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

2026ஆம் ஆண்டில் 120000 அதிகமானோர் அரச சேவைக்கு

2026ஆம் ஆண்டில் அரச சேவைக்கு 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஆட்சேர்ப்பு செய்யும் விரிவான வேலைத்திட்டத்தை அரசாங்கம்...

More like this